புதுச்சேரி

இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்களில் 7-ஆவது இடத்தை பிடித்த புதுச்சேரி பாகூா்

இந்திய அளவில் சிறந்த 10 காவல் நிலையங்களில் புதுச்சேரி பாகூா் காவல் நிலையம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

Syndication

இந்திய அளவில் சிறந்த 10 காவல் நிலையங்களில் புதுச்சேரி பாகூா் காவல் நிலையம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த 10 காவல் நிலையங்களை தோ்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கெளரவித்து வருகிறது.

இந்த விருது குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆா்வம் காட்டுதல், குற்றப் பதிவேடுகளைப் பராமரித்தல், புகாா் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த 10 காவல் நிலையங்களுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் புதுச்சேரி பாகூா் காவல் நிலையம் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த காவல் நிலையமாக தோ்வாகியுள்ள பாகூா் காவல் ஆய்வாளா் சஜித் மற்றும் போலீஸாருக்கு ஐ.ஜி. அஜித்குமாா் சிங்கலா பாராட்டு தெரிவித்தாா்.

ஏற்கெனவே 2018-இல் நெட்டப்பாக்கம் காவல் நிலையம் இந்திய அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT