வில்லியனூா் உருவையாறு மேம்பாலம் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் வில்லியனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் நிகழ்விடம் சென்ற போலீஸாா் சாக்கு முட்டையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் இறந்துகிடந்த பெண் கடந்த 5 நாள்களுக்கு முன் மாயமான வில்லியனூா், பழைய தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி (45) என்பது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் தமிழ்ச்செல்வி கணவரிடம் விவாகரத்துப் பெற்று தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், அவருக்கும் ஒதியம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கும் இச் சம்பவத்துக்கும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.