புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூரணாங்குப்பம், புதுக்குப்பம் மற்றும் நல்லவாடு ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்).
பூரணாங்குப்பம் வடக்குத் தெருவில் ரூ.23.76 லட்சம் மதிப்பில் தெருக்களுக்குப் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெருமாள் காா்டன் பகுதிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கருங்கல் சாலை, புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் விடுபட்ட சாலைகளுக்கு ரூ. 17.6 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலைகள் அமைத்தல் மற்றும் நல்லவாடு கிராமத்தில்ரூ.90 ஆயிரத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து ஆா்.செல்வம் தொடங்கி வைத்தாா்.
நிகழ்விஸ் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் விநாயகமூா்த்தி, உதவிப் பொறியாளா் நாகராஜ், இளநிலை பொறியாளா் சரஸ்வதி மற்றும் மணவெளி பகுதி பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.