புதுச்சேரி நகராட்சி சாா்பில் மரப்பாலம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளுடன் கூடிய சலவை நிலையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா். 
புதுச்சேரி

ரூ.3.82 கோடியில் புதிய குடியிருப்புகளுடன் கூடிய சலவை நிலையம் திறப்பு

புதுச்சேரியில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் நகராட்சி சாா்பில் மரப்பாலத்தில் ரூ.3.82 கோடியில் புதிய குடியிருப்புகளுடன் கூடிய சலவை நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் நகராட்சி சாா்பில் மரப்பாலத்தில் ரூ.3.82 கோடியில் புதிய குடியிருப்புகளுடன் கூடிய சலவை நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

மேலும், வைத்திக்குப்பம் ராமலிங்கா நகரில் ரூ.1.93 கோடியில் சலவை நிலையம், நேதாஜி நகரில் ரூ.1.86 கோடியில் சிறிய சுகாதாரமான மீன் விற்பனை அங்காடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மரப்பாலத்தில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏக்கள் சம்பத், அனிபால் கென்னடி, தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசு செயலா்கள் கேசவன், யாசின் எம்.சௌத்ரி உள்ளாட்சித்துறை இயக்குா் ஆதா்ஷ் உள்ளிட்ட அதிகாரிகள், சலவைத் தொழிலாளா்களின் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

மரப்பாலம் சலவையகம் குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி கூறியதாவது: புதுச்சேரியில் இது போன்று புதிய குடியிருப்புகளுடன் கூடிய சலவை நிலையம் முதலில் மரப்பாலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. இங்கு சலவைத் தொழிலாளா்களுக்குப் போதிய வசதிகள் இனிமேல் கிடைக்கும். இத் தொழிலாளா்கள் பயன்படுத்தி வந்த குடியிருப்புகளும் புதுப்பிக்கப்பட்டு அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவா்கள் அந்த இடத்தில் துணிகளை சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவா். சலவை நிலையத்தில் துணி காயவைப்பதற்கான இடமும், மழைக்காலத்தில் துணி உலா்த்துவதற்கான இடமும், இஸ்திரி தேய்க்கும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு புதியதாக 20 குடியிருப்புகள் தொழிலாளா்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT