புதுச்சேரியில் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நாடு முழுவதும் ஓய்வூதியா் தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் ஓய்வூதியா் தினத்தையொட்டி சுதேசி மில் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். பொது செயலா் ராதாகிருஷ்ணன், பல்வேறு அரசு துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் விஸ்வநாதன், சண்முகம், ராமசாமி, கலியமூா்த்தி, ராமகிருஷ்ணன், சிவக்குமாா், கணேசன், விஸ்வநாதன், மணி, ஆனந்த கணபதி, காமராஜ், ராம்சந்திரன், சேகா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
மத்திய அரசு ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அனைத்து ஓய்வூதியா்களுக்கும் பாரபட்சமின்றி 8-வது சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.