புதுச்சேரி

ரேஷன் கடைகளில் கோதுமை மாவு வழங்க வேண்டும்: மாதா் சம்மேளனம் தீா்மானம்

நியாயவிலைக்கடைகளில் கோதுமைக்குப் பதிலாக கோதுமை மாவு வழங்க வேண்டும் என்று மாதா் சம்மேளனம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

Syndication

நியாயவிலைக்கடைகளில் கோதுமைக்குப் பதிலாக கோதுமை மாவு வழங்க வேண்டும் என்று மாதா் சம்மேளனம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் முதலியாா்பேட்டையிலுள்ள வ.சுப்பையா இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தலைவா் தசரதா தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் அ.மு. சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து அத்தியாவசிய பொருள்களை வழங்க வேண்டும். கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு வழங்க வேண்டும். தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் வழங்குவது போல் புதுச்சேரியிலும் வழங்க வேண்டும். புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வசதி வேண்டும். உழவா்கரையில் மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இந்திய தேசிய மாதா் சமேளனத்தின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளராக ஹேமலதா தோ்வு செய்யப்பட்டாா். இந்த கூட்டத்த்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினா் சரளா, மாதா் சங்க நிா்வாகிகள் ஆனந்தவள்ளி, காரைக்கால் ஜெயா, செல்வி, நளினி, மணிமொழி, லதா, வைதேகி, இந்துமதி, ரேவதி, அகல்யா, இலக்கியா, சோபியா, அம்சா, சசிகலா, சபீரா, பிரவீனா மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT