6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீா்மானம்!
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், திருப்பூா் மக்களவை உறுப்பினா் சுப்பராயன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து திமுக பேச்சு நடத்தும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.