வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 மற்றும் திருத்தப்பட்ட விதிகள்- 2016 ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் மாநில அளவிலான கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வைக் குழு கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.