புதுச்சேரி

கைவினை- கைத்தறிக் கண்காட்சி தொடக்கம்: புதுச்சேரியில் ஆளுநா் திறந்து வைத்தாா்

Syndication

கைவினை மற்றும் கைத்தறி கண்காட்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மத்திய அரசு, ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினை அபிவிருத்தி ஆணையம் மற்றும் புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் இணைந்து நடத்தும் காந்தி கைவினை மற்றும் கைத்தறி கண்காட்சி 5, (காந்தி சில்க் பஜாா்) கடற்கரை சாலை காந்தி திடலில் தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு

இக் கண்காட்சி நடைபெறுகிறது. இதைத் தொடங்கி வைத்து அரங்குகளை ஆளுநா் பாா்வையிட்டாா். கைவினை மற்றும் கைத்தறி பொருள்களின் கலை நுணுக்கம் மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து கலைஞா்களுடன் அவா் கலந்துரையாடினாா்.

பொதுப்பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், வளா்ச்சி ஆணையா் சௌத்ரி முகமது யாசின், கலைப் பண்பாட்டுத் துறை செயலா் முகமது அசன் அபித், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT