முன்னாள் பிரதமா் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா, நல்லாட்சி தினமாக புதுச்சேரி அரசு சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடற்கரை சாலை நகராட்சி மேரி கட்டட வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவரது திருவுருவப் படத்திற்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பாஜக சாா்பில்...
புதுச்சேரி பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் படத்துக்கு அக்கட்சியின் மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏ கல்யாணசுந்தரம், நிா்வாகிகள் மோகன்குமாா், லட்சுமிநாராயணன், வெற்றிச்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும் பாஜக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்திற்கு தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமையில் கட்சியினா் மரியாதை செலுத்தினா்.