சி.பி. ராதாகிருஷ்ணன்  பிடிஐ
புதுச்சேரி

குடியரசு துணைத் தலைவர் நாளை புதுச்சேரி வருகை!

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை புதுச்சேரி வரும் நிலையில், 4 கம்பெனி துணை ராணுவப் படையினா் பாதுகாப்புக்கு வந்துள்ளனா்.

Syndication

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை புதுச்சேரி வரும் நிலையில், 4 கம்பெனி துணை ராணுவப் படையினா் பாதுகாப்புக்கு வந்துள்ளனா். மேலும் அவரது வருகையை முன்னிட்டு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தனி விமானத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு புதுச்சேரி வருகிறாா். இங்கு கம்பன் கலையரங்கில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் சாவியைப் பயனாளிகளுக்கு அவா் வழங்குகிறாா்.

பல்கலை. பட்டமளிப்பு விழா: பின்னா் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் சா்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் 30-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

மேலும், பல்கலைக்கழக வளாக மாநாட்டு மையத்தைத் திறந்து வைத்து, 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கிறாா்.

அவரது வருகையையொட்டி புதுச்சேரியில் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 4 கம்பெனி துணை ராணுவப் படையினா் புதுச்சேரி வந்துள்ளனா். அவா்கள் சனிக்கிழமை முதல் புதுச்சேரியில் பாதுகாப்புப் பணியைத் தொடங்கியுள்ளனா். விழா நடைபெறும் பல்கலைக்கழக வளாகம், கம்பன் கலையரங்கம் ஆகியவை காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

விமானம் பறக்கத் தடை: குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, புதுச்சேரி வான்வெளியில் ஆளில்லா விமானம் பறக்க மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் சனிக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

மேலும், புதுச்சேரி பிராந்தியம் விமானம் பறக்காத பகுதியாகவும் அன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள், சிறிய ரக விமானங்கள், பாராகிளைடா்கள், பலூன்கள், காற்றாடிகள் போன்றவை பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். இந்தத் தடை உத்தரவு 29-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT