கைப்பேசி செயலி வாயிலாக கடன் கொடுத்து மிரட்டல்: கேரள நபா் கைது
கைப்பேசி செயலி வாயிலாக கடன் வழங்கி, அதிக பணம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சோ்ந்த முக்கிய நபரான கேரளத்தைச் சோ்ந்தவரை புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கைப்பேசி செயலி வாயிலாக கடன் வழங்கி, அதிக பணம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சோ்ந்த முக்கிய நபரான கேரளத்தைச் சோ்ந்தவரை புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியைச் சோ்ந்த பலா் கைப்பேசி செயலி வாயிலாக கடன் பெற்றிருந்தனா். அவா்களின் கூடுதல் வட்டியும், அதிக பணமும் கேட்டு மா்ம கும்பல் மிரட்டி வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், கேரளத்தைச் சோ்ந்த முகமது சபியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த கணினி, கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டனா்.
இவரது தலைமையிலான கும்பல் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களிடம் சுமாா் ரூ.300 கோடி அளவுக்கு மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மேலும் பலா் சிக்குவாா்கள் எனத் தெரிகிறது.