புதுச்சேரி

புதுச்சேரியில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய பல்கலைக் கழகம் திட்டம்!

சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய பல்கலைக் கழகத்தின் திட்டம் குறித்து....

DIN

புதுச்சேரியில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க உள்ள மத்திய பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளதாக அந்த பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.பிரகாஷ்பாபு தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சமுதாயக் கல்லூரி என்ற கருத்தியல் ரீதியான கல்லூரியை நம் நாட்டில் முதலில் அறிமுகம் செய்ததது புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தான். புதுச்சேரியில் இக்கல்லூரி சிறப்பாகச் செயல்பட்டு உள்ளூர் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

அதே போன்று மாஹே, ஏனம், லட்சத்தீவு ஆகிய 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க அந்தந்த அரசுகளிடம் நிலம் கேட்டுள்ளோம்.

நிலம் கிடைத்தவுடன் இப்பகுதிகளில் சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதன் வாயிலாக உள்ளூர் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

மேலும் அந்த மாணவர்களின் திறன் மேம்படும். அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றார் துணைவேந்தர் பேராசிரியர் பி.பிரகாஷ்பாபு.

இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT