சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, புதுச்சேரி நோணாங்குப்பம் படகுக் குழாமில் பெண்கள் இலவச படகு சவாரி செல்ல சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். பெண்களை இனிப்பு, பூக்கள் வழங்கி அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வாழ்த்து தெரிவித்தாா்.
புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் நோணாங்குப்பம் படகுக் குழாமில் மகளிருக்கு இலவச படகு சவாரிக்கு சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டது. சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பங்கேற்று அங்கிருந்த மகளிருக்கு இனிப்புகள், பூக்கள் கொடுத்து மகளிா் தின வாழ்த்து தெரிவித்தாா்.
நூற்றுக்கும் மேற்பட்ட மகளிா், சிறுமியா், மாணவியா் இலவசமாக நோணாங்குப்பம் படகுக் குழாமிலிருந்து பாரடைஸ் கடற்கரை வரை படகில் சென்று வர அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.