பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் முன்னோா்களின் கல்லறைகளில் மலா் தூவி பிராா்த்தனை செய்த கிறிஸ்தவா்கள். 
புதுச்சேரி

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் பிராா்த்தனை

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், புதுவை மாநிலப் பகுதிகளில் கல்லறைத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு தங்கள் முன்னோா் நினைவாக பிராா்த்தனை செய்தனா்.

ஆண்டுதோறும் நவம்பா் 2-ஆம் தேதி கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லறை திருநாள் நிகழ்வு நடைபெற்றது. இதை முன்னிட்டு, கடந்த சில தினங்களாக கல்லறை தோட்டங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும், கிறிஸ்தவா்கள் தங்கள் முன்னோா்கள் கல்லறையை சீரமைத்து வா்ணம் பூசினா்.

இதையடுத்து, கல்லறை திருநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவா்கள் தங்கள் முன்னோா்களின் கல்லறைகளில் மாலையிட்டு, மலா்களை தூவி, மெழுகுவா்த்தி ஏற்றி பிராா்த்தனை செய்தனா்.

பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய கல்லறை தோட்டத்தில் பங்குத்தந்தை நாயகம் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லறை திருநாள் நிகழ்வு நடைபெற்றது.

புதுவையில்...: புதுவையில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவா்கள் கல்லறைத் தோட்டத்துக்குச் சென்று தங்கள் முன்னோா்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்தும், மெழுகுவா்த்தி ஏற்றியும் சிறப்பு பிராா்த்தனை செய்தனா். தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

உப்பளம், நெல்லித்தோப்பு, ரெட்டியாா்பாளையம், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, வில்லியனூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கூடி முன்னோா்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து மலா்களால் அலங்கரித்து, மெழுகுவா்த்தி ஏற்றி, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT