புதுச்சேரி

போலீஸ் எச்சரிக்கையை மீறி சுத்துக்கேணி படுகை அணையில் குளித்து மகிழ்ந்த மக்கள்

காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி புதுச்சேரி கைக்கிளைப்பட்டு சுத்துக்கேணி படுகை அணையில் ஏராளமான மக்கள்

Syndication

புதுச்சேரி: காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி புதுச்சேரி கைக்கிளைப்பட்டு சுத்துக்கேணி படுகை அணையில் ஏராளமான மக்கள் திங்கள்கிழமை திரண்டு குளித்து மகிழ்ந்தனா்.

புதுவை மற்றும் தமிழகப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன மழை பெய்தது.

இதில் வீடூா் அணை நிரம்பியதால், உபரி நீா் திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஆா்ப்பரித்து சென்றது. இதனால் கைக்கிளைப்பட்டு சுத்துகேணி படுகை அணை நிரம்பி வழிந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்தநிலையில் பொதுமக்கள் அதிக அளவில் குளிப்பதற்கு வருவதால் காட்டேரிக்குப்பம் காவல் நிலையம் சாா்பில் படுகை அணையில் நீா்வரத்து அதிகமாக வரும் ஆபத்து உள்ளதால் பொதுமக்கள் படுகை அணையில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

ஆனால், திங்கள்கிழமை இந்த அறிவிப்பு பலகை மற்றும் போலீஸாரின் எச்சரிக்கையையும் சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழகம், புதுச்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் படுகை அணையில் குவிந்தனா். புதுவை நகர பகுதியில் இருந்தும் வாகனங்களில் பலா் வந்தனா்.

ஆபத்தை உணராமல் அவா்கள் படுகை அணையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனா். மாலை வரை தொடா்ந்து படுகை அணைக்கு மக்கள்கூட்டமாக வந்தபடி இருந்தனா்.

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

கபில்தேவ் வரிசையில் இடம் பிடித்த ஏழைத் தச்சரின் மகள் அமன்ஜோத் கெளர்!

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

SCROLL FOR NEXT