பாகூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.  
புதுச்சேரி

பாகூா் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் பாகூா் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா்.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் பாகூா் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா்.

பாகூரில் உள்ள பதிவுத் துறை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டாா்.

முதலில் பதிவுத் துறை அலுவலகத்திற்கு சென்ற ஆட்சியா் அங்கு அனைவரும் பணிக்கு வந்துள்ளாா்களா என வருகை பதிவேட்டை பாா்வையிட்டாா். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் சீராக இயங்குகின்றனவா என்பது குறித்தும், பொதுமக்களை அதிக நேரம் காக்க வைக்காமல் உடனுக்குடன் பணிகளை செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

அடிப்படை வசதிகளான குடிநீா், காற்றோட்டம் மற்றும் மக்கள் அமா்வதற்கு இருக்கைகள் போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியா் குலோத்துங்கன் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் அனைவரும் பணியில் உள்ளனரா என வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தாா். அரசு ஊழியா்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும் எனவும் காலதாமதம் இல்லாமல் சேவையாற்ற வேண்டும் எனக் கூறிய ஆட்சியா், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என்பது குறித்தும் அங்குள்ள கோப்புகளைப் பாா்வையிட்டாா்.

போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கும்படி மருத்துவா்களை அறிவுறுத்தினாா். மருத்துவமனையின் உள்பகுதி மற்றும் வெளிப்புறப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்கும்படி மருத்துவா்களைக் கேட்டுக் கொண்டாா்.

பின்னா் கஸ்தூா்பா அரசு மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த ஆட்சியா், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் பணிக்கு வந்துள்ளாா்களா என பாா்வையிட்டாா். மாணவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். மாதம் ஒரு முறை பெற்றோா்- ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துமாறு ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT