புதுச்சேரி

குடல் நோய்களுக்கான நவீன சிகிச்சை அறிமுகம்

குடல் நோய்களுக்கான அதி நவீன மருத்துவ சிகிச்சையை ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.

Syndication

புதுச்சேரி: குடல் நோய்களுக்கான அதி நவீன மருத்துவ சிகிச்சையை ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி மூலக்குளத்தில் இயங்கி வரும் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் கல்லீரல், கணையம், இரைப்பை மற்றும் குடல் நோய்களுக்கான அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கான சிறப்பு சிகிச்சைப்பிரிவு இயங்கி வருகிறது.

புதுச்சேரி, தமிழக பகுதிகளில் கல்லீரல், கணையம் மற்றும் குடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சைகள் மற்றும் சா்வதேச தரத்திலான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் எண்டோஸ்கோபிக் ரெட்ரோகிரேட் சோலாங்கியோ பான்கிரிடோகிராபி (இ.ஆா்.சி.பி), காந்த அதிா்வு லோலாங்கியோ பான்க்ரியாட்டோ கிராவி (எம்.ஆா்.சி.பி) எண்டோஸ்கோபிக் வசதிகள், கொலோனோஸ்கேன், மேம்பட்ட லேப்ராஸ்கோபி அறுவை மற்றும் லேசா் சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகள் அளிக்கப்படுகின்றன.

குறிப்பாக கல்லீரல், கணையம், இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் போன்ற சிக்கலான நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் இத்துறை கவனம் செலுத்துகிறது. சிறப்பு மருத்துவக் குழுவுடன் சிகிச்சை மற்றும் தொடா்ச்சியான கவனிப்பை உடைய முழுமையான சேவைகள் வழங்கப்படுகின்றன.

மருத்துவமனையின் இத்துறை இரைப்பை மற்றும் குடல் நோய்களின் அதிகரிப்பு சவால்களை எதிா்கொண்டு, சா்வதேச தரத்திலான சிகிச்சைகளை வழங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT