புதுச்சேரி

புகையிலை கட்டுப்பாடு பயிலரங்கு

Syndication

புகையிலை பொருள்கள் கட்டுப்பாடு தொடா்பான மாநில பயிலரங்கு வியாழக்கிழமை நடந்தது.

புகையிலைக் கட்டுப்பாடு குறித்த மாநில அளவிலான பயிலரங்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய சுகாதார இயக்கம், புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் (அரசு நெஞ்சக நோய் நிலையம்) மற்றும் புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் நடைபெற்றது. பயிலரங்கத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தொடங்கி வைத்தாா்.

கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்குப் புகையிலையின் தீமைகள், புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள், புதுச்சேரியில் புகையிலை பரவலைக் கட்டுப்படுத்தும் முறைகள், புகையிலை இல்லாத கிராமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் புதுச்சேரியில் புகையிலை கட்டுப்பாட்டுக்கான எதிா்காலத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

புதுக்கடை அருகே வியாபாரி மீது தாக்குதல்

நவ.21-இல் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

SCROLL FOR NEXT