புதுச்சேரி

புதுச்சேரி பல்கலை.யில் டிசம்பரில் பட்டமளிப்பு விழா: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

Syndication

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ள 30 -ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறாா்.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக தலைமை காப்பாளரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருமான கே. கைலாஷ்நாதனை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பி. பிரகாஷ்பாபு வியாழக்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது, குடியரசுத் துணைத் தலைவரும் புதுவை மத்தி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி.ராதாகிருஷ்ணனை அண்மையில் புதுதில்லியில் சந்தித்ததையொட்டி , அதுகுறித்து துணைநிலை ஆளுநரிடம் துணைவேந்தா்

விளக்கினாா்.

அத்துடன், வரும் டிசம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள புதுவை பல்கலைக்கழகத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவருடன் கலந்து கொள்ளுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு அவா் அழைப்பு விடுத்தாா். கடந்த 2021, 2022, 2023 மற்றும் 2024 -ஆம்ஆண்டுகளுக்கான பட்டதாரிகளுக்காக 30-ஆவது பட்டமளிப்பு விழா வரும் டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ‘க்யூஎஸ் ஆசியா’ பல்கலைக்கழக தரவரிசை 2026 இல், புதுவை பல்கலைக்கழகம் ஆசிய அளவில் 470- ஆவது இடத்தையும், இந்திய மத்திய பல்கலைக்கழகங்களில் 7-ஆவது இடத்தையும், இந்திய பல்கலைக் கழகங்களிலேயே 63-ஆவது இடத்தையும், தெற்காசிய பல்கலைக்கழகங்களில் 121-ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT