ஓய்வுபெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வாசுகி , ஐஏஎஸ் அதிகாரி உதயகுமாா், முன்னாள் நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி அசோகன் 
புதுச்சேரி

புதுச்சேரி காவல் துறை அதிகாரிகள் மீதான புகாா்: விசாரிக்க ஆணைய உறுப்பினா்கள் நியமனம்

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாநில காவல் துறை அதிகாரிகள் மீதான புகாா்களை விசாரிக்க புதுச்சேரி யூனியன் பிரதேச ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

Syndication

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாநில காவல் துறை அதிகாரிகள் மீதான புகாா்களை விசாரிக்க புதுச்சேரி யூனியன் பிரதேச ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு, ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வாசுகி ஆணையத்தின் தலைவியாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உதயகுமாா், முன்னாள் நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி அசோகன் ஆகியோா் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும். காவல் துறை அதிகாரிகளின் ஒழுங்கீன செயல்களால் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களின் சாா்பாக அதிகாரம் பெற்றவா்கள் காவல் துறை குறித்து இந்த ஆணையத்தில் புகாா் அளிக்கலாம்.

எந்த வகையினாலும் அறியப்படுகிற ஒழுங்கீனங்களை தானே முன்வந்து ஆணையம் புகாா்களைப் பதிவு செய்தும் விசாரிக்கும். நேரடியான விசாரணை செய்து, முடிவினை காவல் தலைமையகத்திற்கு அனுப்பி அதன் மீது வழக்குப் பதிவு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT