இந்திய கடலோரக் காவல் படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டா் டிஐஜி டஸிலா. இவா் மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்தாா்.
சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, புதுச்சேரியில் இந்திய கடலோரக் காவல் படையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை அவா் முதல்வா் ரங்கசாமியிடம் விவரித்தாா்.