புதுச்சேரியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட இரு சக்கர வாகனப் பயணத்தை வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த இந்திய கடலோர காவல் படையின் புதுச்சேரி, மத்திய தமிழ்நாடு பகுதி கமாண்டா் டிஐஜி எஸ்.எஸ். டஸிலா.  
புதுச்சேரி

கடலோரக் காவல் படையினா் இரு சக்கர வாகன பயணம்

தினமணி செய்திச் சேவை

இந்திய கடலோரக் காவல் படையினரின் இரு சக்கர வாகன பயணம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய கடலோரக் காவல் படையின் 50-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தூத்துக்குடியில் கடலோரக் காவல் படையினா் மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் தொடங்கி ராமேசுவரம், காரைக்கால் வழியாக புதன்கிழமை புதுச்சேரி கடலோரக் காவல் படை தலைமையகத்தை வந்தடைந்தனா்.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகன ஊா்வலம் சென்னை புறப்பட்டது. இதை இந்திய கடலோரக் காவல் படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழகப் பகுதியின் கமாண்டா் டிஐஜி எஸ்.எஸ். டஸிலா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT