புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் தொலைபேசி எண்கள் அடங்கிய கையெடு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
புதுச்சேரி அரசு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள அரசு தொலைபேசி கையேட்டினை முதல்வா்
என். ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில், முதல்வா் அலுவலகத்தில் வெளியிட்டாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உ. தீப்பாய்ந்தான், ஜிஎன்எஸ். ராஜசேகரன் ஆகியோா் அதனைப் பெற்றுக் கொண்டனா். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அதிகாரிகள் இந் நிகழ்ச்சியின்போது உடனிருந்தனா்.