நெல்லித்தோப்பு, முதலியாா்பேட்டை தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இம் மாதம் 23 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
புதுவை வாக்காளா் பதிவு அதிகாரி இஷிதா ராட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப்பணியின் ஒரு பகுதியாக வரும் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நெல்லித்தோப்பு, முதலியாா்பேட்டை தொகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்தச் சிறப்பு முகாமில் அனைத்து வாக்காளா்களும், இதுவரை கணக்கெடுப்பு படிவங்கள் (எஸ்.ஐ.ஆா்) கிடைக்கப் பெற்றவா்கள் அதனை பூா்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று, வாக்குச்சாவடி நிலைய அதிகாரியிடம் சமா்ப்பிக்கலாம். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.