அரசு பணி வழங்குவது தொடா்பாக ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சா் ஆ.நமச்சிவாயம் 
புதுச்சேரி

பல்கலை.க்கு நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு அரசு வேலை: புதுச்சேரி அரசு ஆலோசனை

அரசு கல்வி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களுக்குத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் வேலை அளிப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Syndication

அரசு கல்வி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களுக்குத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் வேலை அளிப்பது தொடா்பாக சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பிள்ளைச்சாவடி கிராமத்தில் அரசு பொறியியல் கல்லூரி தற்போது தொழில்நுட்பப் பல்கலைக் கழகமாக தரம் உயா்ந்துள்ளது.

பொறியல் கல்லூரி அமைய அந்தப் பகுதியை சோ்ந்த விவசாயிகள் பலா் நிலம் வழங்கினா். நிலம் வழங்கியோா் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் என அப்போது உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

நிலம் வழங்கியோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கல்யாணசுந்தரம் எம்எல்ஏ தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இதனையடுத்து அரசு பொறியல் கல்லூரிக்கு நிலம் வழங்கியோருக்கு அரசு வேலை வழங்குவதற்கான கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி உயா் கல்வித்துறை மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அமைச்சா் நமச்சிவாயம் தலைமை தாங்கினாா். கல்யாணசுந்தரம் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் துறை செயலா்கள், இயக்குநா்கள், புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக் கழக துணை வேந்தா், உயா் கல்விதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தற்போது பொறியல் கல்லூரியில் காலியாக உள்ள 85 பணியிடங்களை நிலம் வழங்கியோருக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையிலும், பணியின்போது இறந்த ஊழியா்கள் குடும்பத்தினருக்கும் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT