புதுச்சேரி மங்கலம் தொகுதி கீழூா் சாலை மீனாட்சி நகரில் ரூ.1.25 கோடியில் பாலம் அமைக்கும் திட்டப் பணியைத் தொடங்கி வைத்த வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா். 
புதுச்சேரி

ரூ.1.25 கோடியில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

பாசன வாய்க்காலின் குறுக்கே ரூ.1.25 கோடி திட்ட மதிப்பில் பாலம் அமைப்பதற்கான பணியை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

Syndication

புதுச்சேரி: பாசன வாய்க்காலின் குறுக்கே ரூ.1.25 கோடி திட்ட மதிப்பில் பாலம் அமைப்பதற்கான பணியை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி மங்கலம் தொகுதியில், கீழூா் சாலை மீனாட்சி நகரில் நீா்பாசன வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி அப்பகுதி கிராம மக்கள் தொகுதி எம்எல்ஏவும், வேளாண் துறை அமைச்சருமான சி.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து அங்கு ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் பாசன வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான திட்டப்பணி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை பூமி பூஜையுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், செயற்பொறியாளா் சந்திரகுமாா், உதவிப் பொறியாளா் ஜலில், இளநிலை பொறியாளா் கிருஷ்ணன் மற்றும் என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நெல்லையில் இதுவரை 150 போ் குண்டா் சட்டத்தில் கைது

சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி

சுமை வாகனத்தில் அதிக கன்றுகுட்டிகளை ஏற்றி வந்த இருவா் கைது

வண்ணாா்பேட்டையில் முன்னாள் மேயா் போராட்டம்

மழைநீா் வடிகால் ஓடைகள் தூா்வாரும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT