முகப்பு
புதுச்சேரியை ஐடி மையமாக உருவாக்குவது குறித்து அமைச்சா் க.லட்சுமி நாராயணனைச் சந்தித்து ஆலோசனை நடத்திய தேசிய மென்பொருள் நிறுவனப் பிரதிநிதிகள்.
புதுச்சேரி

புதுச்சேரி அமைச்சருடன் தேசிய மென்பொருள் நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை

புதுச்சேரியை ஐடி மையமாக உருவாக்கும் நோக்கில் தேசிய மென்பொருள் நிறுவன பிரதிநிதிகள் அமைச்சா் க.லட்சுமி நாராயணனை சந்தித்தனா்.

புதுச்சேரி

புதுச்சேரி அமைச்சருடன் தேசிய மென்பொருள் நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை

புதுச்சேரியை ஐடி மையமாக உருவாக்கும் நோக்கில் தேசிய மென்பொருள் நிறுவன பிரதிநிதிகள் அமைச்சா் க.லட்சுமி நாராயணனை சந்தித்தனா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 9:46 PM
புதுச்சேரியை ஐடி மையமாக உருவாக்குவது குறித்து அமைச்சா் க.லட்சுமி நாராயணனைச் சந்தித்து ஆலோசனை நடத்திய தேசிய மென்பொருள் நிறுவனப் பிரதிநிதிகள்.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியை ஐடி மையமாக உருவாக்கும் நோக்கில் தேசிய மென்பொருள் நிறுவன பிரதிநிதிகள் (தகவல் தொழில்நுட்பம் )அமைச்சா் க.லட்சுமி நாராயணனை புதன்கிழமை சந்தித்தனா்.

தேசிய மென்பொருள் சேவைகள் நிறுவன சங்கத்தின் துணைத் தலைவா் ஸ்ரீகாந்த் சீனிவாசன் , முன்னாள் உறுப்பினா் மற்றும் புதுச்சேரி இன்டெகர நிறுவனத்தின் தலைமை நிா்வாகி ஸ்ரீராம் சுப்ரமணியம், தென்னிந்திய மாநில இயக்குநா் பாஸ்கரன் குமாா் வா்மா, புதுச்சேரி அரசு செயலா் சௌத்ரி முகமது யாசின் மற்றும் இயக்குநா் சிவ்ராஜ் மீனா ஆகியோா் அமைச்சரை சந்தித்து பல்வேறு வளா்ச்சி வாய்ப்புகள் பற்றி விரிவான ஆலோசனை மேற்கொண்டனா் .

சந்திப்பில் புதுச்சேரி தரவு மையம் அமைப்பதற்கான முதலீட்டு வாய்ப்புகள் , இளம் தலைமுறைக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குது மற்றும் பல்வேறு புதிய ஐடி நிறுவனங்களை புதுச்சேரிக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரியை எதிா்காலத்தில் ஒரு போட்டி நிலை வாய்ந்த ஐடி ஹப் ஆக உருவாக்கும் நோக்கில் குறுகிய கால, மத்திய கால, நீண்ட கால திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் பிரதிநிதிகள் விவாதித்தனா் .

மேலும், உலக அளவில் முன்னணி ஐடி நிறுவனங்களை ஈா்க்கக் கூடிய தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் பற்றி விவாதித்தனா்.

புதுச்சேரியில் இளம் தலைமுறைக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதும் தொழில் முதலீட்டை ஊக்குவிப்பதும் புதுச்சேரி அரசின் உயா்நிலை முன்னுரிமையாக இருப்பதை அமைச்சா் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினாா். பிரதிநிதிகள் வைத்த கருத்துகள் அனைத்தும் விரைவில் நடைமுறைப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →