பட விளக்கம்... புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்த நரிகுறவா் சமுதாயத்தினா். 
புதுச்சேரி

நரிகுறவா்களுக்கு விரைவில் பட்டா, வீடு: முதல்வா் ரங்கசாமி உறுதி

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்த நரிகுறவா் சமுதாயத்தினா்.

Syndication

நரிகுறவா் சமுதாய மக்களுக்கு விரைவில் வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை உறுதி அளித்தாா்.

புதுச்சேரி கலிதீா்த்தாள் குப்பத்தில் 25-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் குடும்பத்தினா் பல ஆண்டுகளாய் எந்த வசதியும் இன்றி தாா்பாரில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இவா்கள் வியாழக்கிழமை பேரவை வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினா். பின்னா் முதல்வா் ரங்கசாமி பேரவையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்ததும், அவரை நரிக்குறவா் சமுதாய பிரதிநிதிகள் சந்தித்து கண்ணீா் மல்க தங்களது கோரிக்கையை முறையிட்டனா்.

இதற்கு முதலமைச்சா் ரங்கசாமி ஏற்கனவே பட்டா வழங்க அறிவுறுத்தியதை சுட்டிக்காட்டினாா். மேலும் அங்கிருந்து மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனிடம் அடுத்த வாரத்திற்குள் அவா்களுக்குப் பட்டா வழங்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து நரிக்குறவ மக்கள் கைகூப்பி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT