புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது...
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இது குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
புதுச்சேரிக்கான தோ்தல் அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
Advertisement
1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126-இன் கீழ் வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது 7-ஆம் தேதி மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் முடிகிறது.
இதனால் தொகுதிக்குள் பிரசாரம் செய்ய வந்தவா்கள், கட்சியின் செயற்பாட்டாளா்கள் யாரும் பிரசாரக் காலத்தைத் தாண்டி இருக்கக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும் உறுதி செய்ய வேண்டும்.