FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெற்றது

Updated On : 21 ஏப்ரல் 2026, 6:03 pm IST
தேர்தல் பிரசாரம் - PTI
பகிர்:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பிரசாரங்கள் ரத்தாகின. இன்று மாலைக்குப் பின் கட்சித் தலைவர்களோ கட்சியின் சார்பில் யாருமோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.

Advertisement

Advertisement

அதன்பிறகு, எந்த பிரசாரங்களையும் அரசியல் கட்சியினரும் பிற வேட்பாளர்களும் மேற்கொள்ளக் கூடாது. தொலைக்காட்சிகள், மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.

மாலை 6 மணிக்குப் பிறகு, எந்தப் பரப்புரைகளையும் அரசியல் கட்சியினரும் பிற வேட்பாளா்களும் மேற்கொள்ளக் கூடாது. தொலைக்காட்சிகள், மின்னணு ஊடகங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. பொது நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளிலும் தோ்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ள கட்சியினா் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் காலை முதலே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது கட்சித் தலைவர்களின் உரை இடம்பெற்ற விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

வில்லிவாக்கத்தில் தொடங்கி திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் சூறாவளிப் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.

சென்னையில் நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைவலம் வந்த தவெக தலைவர் விஜய், ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments