முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு! வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்பு!!

இந்திய தேர்தல் முறைகளையும் தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ள புதுச்சேரிக்கு வந்திருந்த 6 நாடுகளைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள் 2 வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டு வியப்படைந்தனர்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 7:33 pm IST
புதுச்சேரிக்கு வந்திருந்த 6 நாடுகளைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள். - @ECISVEEP
பகிர்:

இந்திய தேர்தல் முறைகளையும் தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ள புதுச்சேரிக்கு வந்திருந்த 6 நாடுகளைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள் 2 வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டு வியப்படைந்தனர்.

அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் நடைபெற்ற வாக்குப்பதிவில் 89.08 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய தேர்தல் முறைகளையும் தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ள கிர்கிஸ் குடியரசு, ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா, பூடான் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வந்திருந்திருந்தனர். அவர்கள் தேர்தல் நடைமுறைகள் ம்ற்றும் வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டு வியப்பு அடைந்தனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து புதுச்சேரி மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் கூறுகையில், “6 நாடுகளைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள் புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, கீழூர் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 2 தனித்துவமான வாக்குச் சாவடிகளையும், வாக்குப் பதிவையும் பார்வையிட்டனர்.

இன்று (ஏப்.9) காலை 7 முதல் 11.30 வரை இதற்காக அவர்கள் நேரம் ஒதுக்கி ஒவ்வொரு விஷயங்களையும் அறிந்து கொண்டனர். இந்திய தேர்தல் முறையைப் பார்த்து அவர்கள் வியப்பு அடைந்தனர். இப்படியொரு தொழில்நுட்பம் தங்கள் நாடுகளில் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் போன்றவற்றில் சிறப்பாகவும் நல்ல முறையிலும் பணி செய்துள்ளதாகவும் அவர் பாராட்டினர். மேலும், அனைத்து நடவடிக்கையும் தங்களுக்குத் திருப்தி அளிப்பதாகக் கூறிவிட்டுச் சென்றனர். மேலும், புதுச்சேரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக 2 இடங்களில் மட்டும் சிறிது நேரம் காலதாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. அதை விரைந்து சீர் செய்துவிட்டோம்” என்றார் குலோத்துங்கன்.

summary

nternational delegates under the International Election Visitors’ Programme IEVP are visiting polling stations in Puducherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.