FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வாக்குச் சாவடிக்குள் புகைப்படம், விடியோ எடுத்தால் 3 மாதம் சிறை!

வாக்குச் சாவடிக்குள் புகைப்படம் எடுத்தால் 3 மாதம் சிறைத் தண்டனை...

Updated On : 22 ஏப்ரல் 2026, 12:54 pm IST
கோப்புப்படம் - ANI
பகிர்:

வாக்குச் சாவடிக்குள் புகைப்படம் எடுத்தால் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப். 23) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.

முன்னதாக நடைபெற்ற புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களில் இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டியதால் வாக்குப் பதிவு சதவிகிதம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது தமிழ்நாட்டிலும் அதிகளவிலான இளைஞர்கள் வாக்களிக்க முனைப்பு காட்டி வருவதால், வாக்குப்பதிவில் சாதனை நிகழ்த்த வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் 14.59 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இன்றைய இன்ஸ்டாகிராம் தலைமுறையினர் வாக்களித்த பிறகு விரலில் இடப்பட்ட மையைக் காட்டும் சுயப்படங்கள் அல்லது காணொலிகளை சமூக ஊடகங்களில் பகிர்வது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் வாக்குப்பதிவின் ரகசியத்தன்மை என்பது ஜனநாயகத் தேர்தல் செயல்முறையின் ஒரு அடிப்படை அம்சமாகும், பல்வேறு சட்ட விதிகளின் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாக்குச் சாவடி மையத்துக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தும்போது புகைப்படங்கள் எடுப்பது அல்லது காணொலிகளைப் பதிவு செய்வது குற்றமாகும்.

1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128, வாக்குப்பதிவு தொடர்பான ரகசியத்தன்மை கண்டிப்பாகப் பேணப்படுவதை உறுதி செய்கிறது. வாக்காளர் அல்லது எந்த கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனை மீறினால், பிரிவு 128-இன் கீழ், 3 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இவ்விரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படலாம்.

மேலும், விதிமுறைகளை மீறிய வாக்காளரைத் தகுதி நீக்கம் செய்யப் பரிந்துரைக்கும் அதிகாரமும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. இது எதிர்காலத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான அவர்களின் தகுதியை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.

இதேபோல், அவர்கள் பயன்படுத்தப்பட்ட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் வாக்குப்பதிவு முகவர்கள் பறிமுதல் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments