பாஜகவிற்கு என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை: தேர்தல் தடை குறித்து அசன் மௌலானா
தேர்தல் தடை குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா அளித்த விளக்கம் பற்றி....
பாஜகவிற்கு தன் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அசன் மௌலானா, தேர்தல் செலவுக் கணக்கை முறையாக சமர்ப்பிக்க தவறியதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலின் போது செலவு செய்யப்பட்ட கணக்கு வழக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement
ஆனால் முறையான செலவு, காங்கிரஸ் தலைமைச் செய்த செலவு விவரத்தையும் தன்னுடைய கணக்கில் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், முறையாக அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி தனக்கு இந்திய தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது; இது செல்லாது.
பாஜகவிற்கு தன் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை, அதனால்தான் இப்படி ஒரு உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது என்றார். மேலும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
Former Congress MLA Asan Maulana stated that he does not know what grudge or animosity the BJP holds against him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.