FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு..

5 செப்டம்பர் 2026, 1:03 pm IST
அசன் மௌலானா - fb / aassan Maulaana
பகிர்:

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அசன் மௌலானா, தேர்தல் செலவுக் கணக்கை முறையாக சமர்ப்பிக்க தவறியதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மௌலானா, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அந்த தேர்தலில் தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. அதாவது தான் தேர்தலில் ரூ. 17 லட்சம் செலவு செய்ததாகக் காட்டியுளளார். அதுதவிர ரூ. 33 லட்சம் அளவிலான செலவை மறைத்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தேர்தல் செலவினம் ரூ. 30 லட்சம் என்ற வரம்பை மீறி அவர் செலவிட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டே தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அசன் மௌலானாவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

சமீபத்தில் இதுதொடர்பான புகாரில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசாரணைகளுக்கு ஆஜராகி அவர் விளக்கம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியதுடன் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் அசன் மௌலானா போட்டியிடத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

summary

Former Congress MLA Aassan Maulaana barred from contesting elections for 3 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments