FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்துக்கு கர்நாடகத்தில் அரசு வேலை! காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை!

கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் பேசியது...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 11:03 am IST
தாரகை கத்பர்ட் - TN Assembly
பகிர்:

கர்நாடகத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநிலத்தில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஆக. 18) கர்நாடகத்தின் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் பேசியதாவது:

Advertisement

Advertisement

“கர்நாடகத்தில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. மனித உயிருக்கு இன்று விலையில்லா போயிவிட்டது என்பது வருந்தத்தக்கது. தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்டது.

கர்நாடக அரசு கொடுத்துள்ள இழப்பீடானது உயிருக்கான இழப்பீடாக பார்க்க முடியாது. கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநிலத்தில் அரசுப் பணி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், ”முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ஆணைக்கிணங்க மூன்று பேருக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்க வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, விரைவில் வழங்கப்படும்” என்றார்.

summary

Government jobs in Karnataka for the families of killed Tamilans! Congress MLA makes the request!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments