தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!
கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு...
கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியிருக்கிறது.
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இன்று (ஆக. 13) முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
கன்னட சலுவழி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், கர்நாடகம் முழுவதும் பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளியில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன. இதனால், தமிழக அரசுப் போக்குவரத்து துறை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையே போக்குவரத்து வியாழக்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்குச் செல்லும் பயணிகள் ஒசூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படுகின்றனர். இரு மாநில எல்லையில் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்திப்பள்ளியில் கர்நாடக மாநில போலீஸாரும் தமிழக எல்லையான சூசூவாடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாழக்கிழமை காலை முதல் தமிழக அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் பெங்களூருவுக்குச் செல்லாமல் ஒசூரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
A tense situation has arisen in Hosur today as Tamil Nadu government buses were halted there due to a total shutdown protest in Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.