FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூரில் 2-ஆவது நாளாக முழு அடைப்பு போராட்டம்

ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் தொகுதியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

29 ஆகஸ்ட் 2026, 12:41 am IST
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கூடலூரில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
பகிர்:

ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் தொகுதியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், ஓவேலி பேரூராட்சியிலுள்ள லாரஸ்டன் பகுதியில் இரண்டு தொழிலாளா்களை புலி தாக்கி கொன்ற சம்பவம் அண்மையில் நடைபெற்றது.

இந்த ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்கவும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக போராடியவா்களை கைது செய்ததைக் கண்டித்து ஆக.27, 28 ஆகிய இருநாள்கள் கூடலூா் தொகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் அழைப்பு விடுத்தது.

Advertisement

Advertisement

இதன்படி கூடலூா் தொகுதி முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இதில் கூடலூா் தொகுதி முழுவதும் உள்ள

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தனியாா் தோட்டங்கள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட தனியாா் வாகனங்கள் இயக்கப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments