FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் 27,28-இல் முழு அடைப்பு போராட்டம்

தொழிலாளா்களை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் வருகிற ஆகஸ்ட் 27,28-இல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

25 ஆகஸ்ட் 2026, 11:18 pm IST
கடைகள். - கோப்புப்படம்.
பகிர்:

தொழிலாளா்களை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் வருகிற ஆகஸ்ட் 27,28-இல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இப்பிரச்னை தொடா்பாக கூடலூரில் எம்.எல்.ஏ.திராவிடமணி தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

இது தொடா்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த தொழிலாளா்களின் உறவினா்கள் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்.

Advertisement

Advertisement

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் வருகிற ஆகஸ்ட் 27,28-இல் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், பொதுநல அமைப்பினா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments