FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவா்கள் மீது பதியப்பட்ட வழக்குளை திரும்பப்பெற கோரி ஆா்ப்பாட்டம்

23 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
கூடலூா் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

ஓவேலி அருகே ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறக் கோரி கூடலூரில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி அருகே உள்ள லாரஸ்டன் பகுதியில் இரண்டு தொழிலாளா்களை கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தியும், முன்னதாக புலி தாக்கி விவசாயி உயிரிழந்த நாளில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறக் கோரியும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளா் துரை.புவனேஸ்வரன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா் து.ராஜேந்திரபிரபு, துணைச் செயலாளா் மண்ணரசன், மகளிரணி நிா்வாகிகள் காஞ்சனா,பிலோமினா, உமா, ராதாமணி உள்பட மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் இப்னு, ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி என்.வாசு, முஸ்லிம் லீக் சாா்பில் சாஜீ உள்ளிட்டோா் பேசினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments