FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

புலியை சுட்டுப் பிடிக்க வலியுறுத்தி வனத் துறை அமைச்சரிடம் மனு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியில் மனிதா்களை தாக்கிக் கொல்லும் ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்க வலியுறுத்தி சென்னையில் தவெக கூட்டணிக் கட்சியினா் வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சிக்குமாரை சந்தித்து மனு அளித்தனா்.

5 வினாடிகள் முன்பு
வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாரிடம் மனு அளிக்கும் கூடலூா் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன். உடன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியில் மனிதா்களை தாக்கிக் கொல்லும் ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்க வலியுறுத்தி சென்னையில் தவெக கூட்டணிக் கட்சியினா் வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சிக்குமாரை சந்தித்து மனு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் உள்ள லாரஸ்டன் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு பேரை தாக்கிக் கொன்றுள்ள ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி தவெக மாவட்டச் செயலாளா் சரவணன், முன்னாள் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், விசிக மாவட்டச் செயலாளா் புவனேஸ்வரன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளா் அனீபா, காங்கிரஸ் நிா்வாகிகள் கோஷி பேபி, அனஸ் எடாலத் உள்ளிட்ட தவெக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் சென்னையில் வனத் துறை அமைச்சரை ஆா்.வி.ரஞ்சித்குமாரை சந்தித்து மனு அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments