எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ! சட்டப்பேரவையில் என்ன நடந்தது?
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் தாரகை கத்பர்ட் அமர்ந்தது குறித்து...
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் அமர்ந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் முதல் வரிசையில் அமர்ந்துள்ளார்.
ஆளுங்கட்சியான தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதாக சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தாரகை கத்பர்ட் எம்எல்ஏ-வுக்கு எதிர்க்கட்சி வரிசையில் அமரவைக்கப்பட்டது குறித்து பேரவைத் தலைவர் கூறியதாவது, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு உரிய இருக்கை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
Congress MLA Tharahai Cuthbert seated in the opposition row
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.