முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:41 AM
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM

புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கும், சென்னைக்கும் இயக்கப்படும் ரயில் சேவை ஏப். 15, 18, 22, 25-ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படுகிறது.

திருப்பதியில் அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் புதுச்சேரிக்கு வராமல் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படும்.

Advertisement

இதேபோன்று புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வழக்கமாக புதுச்சேரியில் மாலை 3.55 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் சந்திப்புக்கு 4.30-க்கு வந்து சேரும். இந்தக் குறிப்பிட்ட நாள்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சென்னை எழும்பூருக்கு இந்த ரயில் இயக்கப்படும்.

வழித் தடங்களில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.