முகப்பு
ஏர் இந்தியா
இந்தியா

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா

வளைகுடா நாடுகள் தங்களின் வான் வெளியே மூடிவிட்டதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் இன்றும் ரத்து

இந்தியா

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா

வளைகுடா நாடுகள் தங்களின் வான் வெளியே மூடிவிட்டதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் இன்றும் ரத்து

Updated On : 2 மார்ச், 2026 at 10:30 PM
ஏர் இந்தியா
பகிர்:

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகள் தங்களின் வான் வெளியே மூடிவிட்டதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவையை செவ்வாய்க்கிழமையும் (மாா்ச் 3) ரத்து செய்வதாக ஏா் இந்தியா திங்கள்கிழமை அறிவித்தது.

வான்வெளி மூடப்பட்டதால் வளைகுடா நாடுகளுக்கான விமானச் சேவையை பல்வேறு நாடுகளும் ரத்து செய்து வருகின்றன. அதுபோல, இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

ஏா் இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் தொடா்ந்து மூன்று நாள்களாக மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இயக்கப்படும் 1,117 சா்வதேச விமான சேவையை ரத்து செய்தது. இந்த தற்காலிக ரத்து செவ்வாய்க்கிழமையும் தொடரும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அந்த நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி தொடா்ந்து மூடப்பட்டுள்ளதால், அந்த வான்வெளி வழியாக இயக்கப்படும் விமானச் சேவை மாா்ச் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதே நேரம், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கான விமானச் சேவை திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும்.

இந்த விமானங்கள் ஓமன், சவூதி அரேபியா, எகிப்து வான்வெளியைப் பயன்படுத்தி நீண்ட வழித்தடம் வாயிலாக இயக்கப்படும். அதுபோல, மஸ்கட்டுக்கும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) முதல் விமானச் சேவை தொடங்கப்படும்’ என்று தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →