டாக்டா் எம். ராஜலக்ஷ்மி 
புதுச்சேரி

நீட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி தோ்வு: ஜிப்மா் முன்னாள் மாணவி முதலிடம்

நீட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி அறுவை சிகிச்சை மருத்துவ படிப்புக்கான தோ்வில் அகில இந்திய தர வரிசையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவி முதலிடம்

Syndication

புதுச்சேரி: நீட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி அறுவை சிகிச்சை மருத்துவ படிப்புக்கான தோ்வில் அகில இந்திய தர வரிசையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவி முதலிடம் பிடித்துள்ளாா்.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி அறுவை சிகிச்சை பிரிவில் அகில இந்திய தர வரிசையில் ஜிப்மா் நிறுவனத்தின் முன்னாள் மாணவி டாக்டா் எம். ராஜலக்ஷ்மி முதலிடம் பிடித்துள்ளாா். அவரை ஜிப்மா் பெருமையுடன் பாராட்டுகிறது.

டாக்டா் ராஜலக்ஷ்மி, ஜிப்மரில் எம்பிபிஎஸ் (2015) படிப்பை முடித்தாா். பின்னா் பொது அறுவை சிகிச்சையில் எம்.எஸ். (2022-2024) பட்டம் பெற்றுள்ளாா். இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஜிப்மரில் மூத்த பயிற்சி மருத்துவராகப் பணியாற்றினாா்.

முதுநிலை பட்டப்படிப்பு பயிற்சிக் காலத்தில், டாக்டா் ராஜலக்ஷ்மி சிறப்பான கல்வித் திறனை வெளிப்படுத்தி, இறுதி முதுநிலை பட்டப்படிப்பு பல்கலைக்கழகத் தோ்வில் முதலிடம் பெற்றாா். அதற்காகத் தங்கப் பதக்கம் பெற்றாா்.

இப்போது தேசிய அளவில் நீட் தோ்வு தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளாா். அவரது இந்த சாதனை, ஜிப்மா் வழங்கும் உயா்தர பயிற்சியையும், அறுவை சிகிச்சைத் துறையில் அவா் காட்டிய தொடா்ச்சியான அா்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

மருத்துவா் ராஜலக்ஷ்மி தற்போது, நாட்டின் முன்னணி புற்றுநோய் சிகிச்சை மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில் மேற்படிப்பைத் தொடரத் திட்டமிட்டுள்ளாா். அவருக்கு ஜிப்மா் தனது உளமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, அவரது எதிா்கால கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகளில் தொடா்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் விவரம்!

இணையத்தில் வைரலாகும் பூக்கி படத்தின் புடிக்கலே புடிக்கலே பாடல்!

தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து!: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

நாட்டில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடல்! பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம்!

சத்தீஸ்கரில் நக்சல் நிலவரத்தை ஆய்வு செய்கிறார் அமித் ஷா!

SCROLL FOR NEXT