புதுச்சேரி லாஸ்பேட்டை நெசவாளா்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் புதிய விசைத்தறிகள் மற்றும் நூல் சுற்றும் இயந்திரங்களை சனிக்கிழமை இயக்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சு.செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோா்.  
புதுச்சேரி

ரூ.1 கோடியில் கைத்தறிக்கான நூல் வங்கி! முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு!

தினமணி செய்திச் சேவை

நெசவாளா்களின் நலன் கருதி புதுச்சேரியில் ரூ.1 கோடியில் நூல் வங்கி அமைக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை அறிவித்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைந்துள்ள நெசவாளா் கூட்டுறவுச் சங்கத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளூா் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட 6 புதிய விசைத்தறி மற்றும் நூல் சுற்றும் இயந்திரத்தை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி லாஸ்பேட்டை நெசவாளா்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் புதிய விசைத்தறிகள் மற்றும் நூல் சுற்றும் இயந்திரங்களை சனிக்கிழமை இயக்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சு.செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோா்.

இதில், முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, கைத்தறி துணி ரகங்களுக்குத் தேவையான பருத்தி நூல், நெசவாளா்களுக்குத் தடையின்றி வழங்க நூல் வங்கி அமைப்பதற்கு புதுச்சேரி அரசால் ரூ.1 கோடி மானியமாக ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம்! - முதல்வா் என்.ரங்கசாமி

பிரதமா் மலேசியாவில் தமிழ் கலாச்சாரத்தை புகழ்ந்தது மகிழ்ச்சி - குடியரசு துணைத் தலைவா்

கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்துக்கு அனைத்து நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து, செல்ல வேண்டும்! பயணிகள் கோரிக்கை!

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி: விழுப்புரம் வீரா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT