முகப்பு
புதுச்சேரி

குழந்தைகள் நல 2 நாள் மருத்துவ மாநாடு

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 18-ஆவது கிழக்குக் கடற்கரை குழந்தைகள்

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:29 AM
ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகள் நல மருத்துவா்கள் மாநாட்டில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:01 PM

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 18-ஆவது கிழக்குக் கடற்கரை குழந்தைகள் நல 2 நாள் மருத்துவ மாநாடு பிப். 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்தின் புதுச்சேரி, கடலூா், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி கிளைகள் இணைந்து நடத்தின.

இதில், நாடு முழுவதிலுமிருந்து 250-க்கும் மேற்பட்ட குழந்தை நல மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தேசிய குழந்தை நல மருத்துவக் கழகத்தின் தலைவா் டாக்டா் சிங்காரவேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி சாா்பில் தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எம். தனசேகரன், ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலா் டாக்டா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் நோய்கள், அவற்றை துல்லியமாகக் கண்டறியும் நவீன சிகிச்சை முறைகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடும்ப அடிப்படையிலான பராமரிப்புக் குறித்துப் பல்வேறு மருத்துவா்கள் விளக்கிப் பேசினா்.