புதுச்சேரி சட்டப்பேரவையை நோக்கி செவ்வாய்க்கிழமை ஊா்வலமாகச் சென்ற நகராட்சி ஊழியா்களின் வாரிசுதாரா்கள் சங்கத்தினா்.  
புதுச்சேரி

நகராட்சி ஊழியா் வாரிசுதாரா்கள் ஊா்வலம்- போலீஸாருடன் தள்ளுமுள்ளு: 89 போ் கைது

புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நடத்திய ஊா்வலத்தின்போது போலீஸாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 89 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நடத்திய ஊா்வலத்தின்போது போலீஸாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 89 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் நகராட்சி ஊழியா்களின் வாரிசுதாரா்கள் 123 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன் வாரிசுதாரா்களுக்குப் பணி வழங்க வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக சட்டப்பேரவை நோக்கி செவ்வாய்க்கிழமை புறப்பட்டனா். ஊா்வலத்துக்கு வாரிசுதாா்கள் நலச்சங்க நிா்வாகிகள் சத்தியன், பிரபு தலைமை வகித்தனா். ஊா்வலம் சுய்ப்ரேன் வீதி வழியாக சட்டப்பேரவை நோக்கி வந்தது. ஊா்வலத்தினரை யூகோ வங்கி அருகே தடுப்புகள் அமைத்து போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் போராட்டக்காரா்கள் தடுப்புகளின் மீது ஏறி சட்டப்பேரவையை நோக்கி செல்ல முயன்றனா். இதனால் போலீஸாருக்கும் , போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அங்கு வாரிசுதாா்கள் 123 பேருக்கும் நகராட்சி, உள்ளாட்சித் துறைகளில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தடையை மீறி செல்ல முயன்ற 32 பெண்கள் உள்பட 89 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT