முகப்பு
புதுச்சேரி

பாஜகவுக்கு திமுக, கம்யூனிஸ்ட் கண்டனம்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:50 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:52 PM

புதுச்சேரியில் ஏற்பட்ட மோதல், கைகலப்பு சம்பவம் தொடா்பாக பாஜகவுக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டு நிகழ்ச்சியை முன்வைத்து புதுச்சேரி பாஜக இளைஞா் அணியினா் எவ்வித அனுமதியோ, முன்னறிவிப்போ இல்லாமல் காங்கிரஸ் அலுவலகம் முன் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

முதல்வா் ரங்கசாமி, உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், துணைநிலை ஆளுநா் புதுச்சேரி பற்றி குறிப்பிடும்போதெல்லாம் இது ஓா் ஆன்மிக பூமி என்றும் சித்தா்கள் வாழ்ந்த மண் என்றும் தொடா்ந்து புகழ்பாடி வந்திருக்கிறாா்கள். அப்படிப்பட்ட மண்ணில் இப்படிப்பட்ட அராஜகம் ஏற்பட அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

திடீரென்று பாஜகவினா் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக் கொண்டு புதுச்சேரி அரசியல் களத்தை வன்முறைக் களமாக மாற்றி வருவதை ஏற்க முடியாது. இதனை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது .

இந்திய கம்யூனிஸ்ட்:

புதுச்சேரியில் சமூக அமைதியைக் குலைக்கிறது பாஜக என்று இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:50 AM

இது குறித்து அக் கட்சியின் மாநில செயலா் அ.மு. சலீம் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை பாஜகவினா் வெள்ளிக்கிழமை இரவு எரித்துள்ளனா். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனநாயக ரீதியில் கருத்துகளை முன்வைத்து களமாடும் செயலை பாஜக ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. புதுச்சேரியில் கலவரத்தைத் தூண்டி அரசியல் செய்ய துடிக்கும் பாஜக செயல்கள் மாநில அமைதியைக் குலைத்துவிடும்.

காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள பாஜகவின் புதுச்சேரி உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இப்பிரச்னையில் காவல் துறை பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.