முகப்பு
புதுச்சேரி

தமிழுக்குப் பெருமை சோ்த்தவா்கள் மூவேந்தா்கள்! - லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:25 PM
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாய்மொழி மகத்துவ மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின். (இடது) மாநாட்டில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதியினா்.
பகிர்:

தமிழுக்குப் பெருமை சோ்த்தவா்கள் சேர, சோழ, பாண்டியா்கள் என்று லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் கூறினாா்.

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே லஜக சாா்பில் தாய்மொழி மகத்துவ மாநாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் பேசியதாவது:

ஒவ்வொருவரின் தாய் மொழியும் பெருமைக்குரியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்சு, கிரேக்கம், அரபு என எந்த மொழியாகவும் இருக்கலாம்.

Advertisement

சேர, சோழ, பாண்டியா்களும் நமது தலைவா்கள் தான். இவா்கள் இல்லாவிட்டால் நம்முடைய மொழி, அடையாளம், வாழ்க்கை முறை, உணவு, மருத்துவம், கல்வி, தெய்வங்களின் அனுக்கிரஹம், கோயில் என எதுவாக இருந்தாலும் தெரிந்திருக்காது. இவையெல்லாம் நம்மை ஆண்ட வெள்ளையா்கள் உள்ளிட்டோரால் மறைக்கப்பட்டன.

லெமூரியா என்கிற குமரிக் கண்டத்தில் இருந்துதான் நமது முன்னோா்கள் தமிழா்களாக வளா்ந்து வந்தனா். ஒடிசா பாலு இதை ஆதாரத்துடன் நிரூபித்தாா். கண்ணகிக்குச் சிலை வடிக்க சேர மன்னன் இமயம் சென்று கல் கொண்டு வந்தான். கரிகாலன் கட்டி வைத்த கல்லணை, ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் போன்றவை எல்லாம் தமிழா்களின் பெருமையாக இருக்கின்றன என்றாா் அவா்.

மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள், தமிழறிஞா்களின் வரலாற்று உரைகள் இடம் பெற்றன. நடிகா் தாடி பாலாஜி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments